அவதார் வேடத்தில் த்ரிஷா

த்ரிஷா நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'நாயகி' படம் வந்த அடையாளம் கூடத் தெரியாமல் போய்விட்டது. அந்தப் படத்தில் த்ரிஷா பேயாக
நடித்திருந்தார். தற்போது 'மோகினி' படத்திலும் பேயாகவே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு வழக்கம் போலவே சமூக வலைத்தள கருத்தாளர்கள் அதைப் பற்றி வழக்கம் போல மீம்ஸ்களால் காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

'அவதார்' படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல ஏறக்குறைய அதே முகத் தோற்றத்துடன் நீல நிறத்தில் த்ரிஷா இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து பெண் கடவுள்களைப் போல எட்டு கைகளிலும் விதவிதமான ஆயுதங்களுடன் உள்ள அந்த முதல்பார்வை விரைவில் ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை. இல்லையென்றால், த்ரிஷா இப்போது அந்த அளவிற்கு 'வொர்த்' இல்லை என நினைத்து யாரும் கண்டு கொள்ளாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'மதுர, அரசாங்கம், மிரட்டல்' ஆகிய படங்களுக்குப் பிறகு சுமார் 4 வருடங்கள் கழித்து மாதேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார். 'நாயகி' படம் போல அல்லாமல் இந்த 'மோகினி' படத்தை ஓட வைப்பதற்கு த்ரிஷா அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் என தாராளமாக எதிர்பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget