வேர்ட் எண்களின் வரிசையை மாற்றி அமைக்க வேண்டுமா

வேர்ட் டாகுமெண்ட்டில், எண்கள் அடங்கிய பட்டியல், மாறா நிலையில், இடது ஓரமாக ஒழுங்குபடுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல்
எண்களை, டாகுமெண்ட்டின் நடுவாகவோ, வலது புறம் ஒழுங்கு படுத்தப்பட்டோ அமைக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம். 

எண்கள் இடது புறமாக அமைக்கப்படுகையில், டெசிமல் புள்ளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு
அமைக்கப்படுவதில்லை. ஓரிலக்க எண்களைக் காட்டிலும், இரண்டு அல்லது மூன்று இலக்கங்கள் கொண்ட எண்கள், டெக்ஸ்ட் அருகே அமைக்கப்படுகின்றன. இவற்றை எப்படி, வலது பக்கமாக, ஒழுங்கு படுத்தி அமைப்பது எனப் பார்க்கலாம்.

மாற்றி ஒழுங்கு செய்திட வேண்டிய எண்கள் பட்டியல் உள்ள டாகுமெண்ட்டினைத் திறக்கவும். கர்சரை அந்த பட்டியலில் எங்காவது ஓரிடத்தில் நிறுத்தவும். ரிப்பனில் ஹோம் டேப் திறக்கப்பட்டு இருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, Paragraph பிரிவில், “Numbering” பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் “Define New Number Format” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு கிடைக்கும் Define New Number Format டயலாக் பாக்ஸில், “Right” (அல்லது “Center”) தேர்ந்தெடுக்கவும். இங்குள்ள Preview பகுதியில், பட்டியல் எப்படி காட்சி அளிக்கும் என்பது காட்டப்படும். இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில், ஓகே கிளிக் செய்து, டயலாக் பாக்ஸை மூடவும். 

இப்போது, டெசிமல் புள்ளிகள், எண்கள் ஆகியவை ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். எண்களுக்கும், டெக்ஸ்ட்டுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் காணலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget