ஸியோமி ரெட்மி 3 எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போன்

ஸியோமி நிறுவனம், அண்மையில் தன்னுடைய ஸ்மார்ட் போன் ஒன்றை Redmi 3S+ என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அனைவரும்
எதிர்பார்த்தபடி, இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில், இணையதளம் வழி வாங்க முடியாத, கடைகளில் மட்டுமே வாங்கக் கூடிய முதல் ஸ்மார்ட் போனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் விற்பனைக் கடைகள் அனைத்திலும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 9,499 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கு முன் இது குறித்து வந்த அறிவிப்பில்,
ரூ. 8,799க்கு இதனை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த புதிய ஸ்மார்ட் போன், இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட Redmi 3S Prime போன் போலவே தான் உள்ளது. ஒரு வேறுபாடு உண்டு. அந்த போனில் ராம் மெமரி 3 ஜி.பி. இதில் அது 2 ஜி.பி. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. விரல் ரேகை ஸ்கேனர் இதில் வழங்கப்படவில்லை.

இதன் பேட்டரி 4100 mAh திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், இரண்டு நாட்களுக்கு இது மின்சக்தி வழங்கும் என ஸியோமி அறிவித்துள்ளது. 

இதன் மற்ற சிறப்பு அம்சங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0.1. திரை 5 அங்குல அளவில் 720 x 1280 பிக்ஸெல் அடர்த்தி கொண்டது. ப்ராசசர் ஆக்டா கோர் திறன் கொண்ட Snapdragon 430. Adreno 505 ஜி.பி.யு. ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதன் 32 ஜி.பி. ஸ்டோரேஜ் திறனை 128 ஜி.பி. வரை உயர்த்தலாம். 

பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாகவும், முன்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 139.3 x 69.6 x 8.5 மிமீ. எடை 144 கிராம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத், ஏ.ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் கிடைக்கின்றன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget