சேரிப்பெண்ணாக மிரட்டும் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா என்றாலே அல்ட்ரா மார்டன் பெண் என்று தான் நினைவுக்கு வரும். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அப்படித்தான்
நடித்திருக்கிறார். முதன் முறையாக வடசென்னை படத்தில் குடிசையில் வாழும் சேரிப்பெண்ணாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது...

நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்களும்,
கேரக்டரும்தான் முடிவு செய்கிறார்கள். மார்டன் பெண்ணாக அதிகமாக நடித்திருப்பது உண்மை. நானும் வித்தியாசமாக நடிக்கும் ஆசையுடன் இருப்பவள்தான். அரண்மணை படத்தில் பேயாக நடித்தது வித்தியாசமாக இருந்தது. இப்போது வடசென்னை படத்தில் குடிசையில் வாழும் பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக அந்த பகுதி பெண்களை கண்காணித்து மேனரிசம் கற்று வருகிறேன்.

குடிசை பகுதி பெண் என்பதால் கிளாமர் இருக்காது என்று நினைக்க வேண்டாம். கிளாமர் என்பது ஒரு குறிப்பிட்ட வகை பெண்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. குடிசை பெண்களிலும் கிளாமர் இருக்கிறது. அது எப்படி என்பது படம் வந்ததும் தெரியும். படங்களில் பிசியாக நடிப்பதால் பாடுவது குறைந்து விட்டது. அடுத்த ஆண்டு முதல் பாடலிலும் கவனம் செலுத்த இருக்கிறேன். என்கிறார் ஆண்ட்ரியா.

பழைய பதிவுகளை தேட