2012 - நம்பிக்கை நட்சத்திரங்கள் (நடிகைகள் மட்டும்) ஹீ...ஹீ...!

2011ம் ஆண்டு வெளியான 100க்கும் மேற்பட்ட நேரடி தமிழ் திரைப்படங்களில் 50க்கும் (சரியான கணக்கு 52 எனத்தகவல்) மேற்பட்ட கதாநாயகிகள் அறிமுகமாகி உள்ளனர். இவர்களில் 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்க இருப்பது யார்? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, டாப்ஸி, கார்த்திகா, இனியா, நித்யா மேனன், ப்ரணீதா, பிந்து மாதவி, யாஸ்மின், ஜனனி அய்யர், தீக்ஷா சேத் உள்ளிட்ட ஒரு டஜன் புதுமுக நடிகைகள்
தங்களது முதல் படம் மூலமே கவனம் ஈர்த்த கதாநாயகிகளாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அமலாபால், அஞ்சலி, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமீரா ரெட்டி, அனன்யா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்ட கதாநாயகிகளுடன் மேற்படி ஒரு டஜன் அறிமுக(2011) நாயகிகளும் சபாஷ் சரியான போட்டி! என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு 2012ல் போட்டி போடுவார்கள் என்பது திண்ணம்!


இதுத்தவிர நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கும் இலியானா மற்றும் 2012-ல் வெளிவர இருக்கும் இஷ்டம் படத்தில் விமல் ஜோடியாக நடித்து வரும் நிஷா அகர்வால்(காஜல் அகர்வாலின் தங்கை) உள்ளிட்ட 2012 புதுமுக நடிகைகளின் வரவு வேறு. தற்போதைய தமிழ் முன்னணி நடிகைகளுக்கும், 2011ல் அறிமுக நடிகைகளுக்கும் கடும் போட்டியை உண்டாக்கும்! இதையெல்லாம் கூட்டி கழித்துப்பார்த்து 2012-ல் ஜொலிக்க இருக்கும் ஒரு டஜன் நடிகைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.


அவர்களின் விவரம் வருமாறு : அமலா பால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, தீக்ஷா சேத், காஜல் அகர்வால், இனியா, கார்த்திகா, பிந்து மாதவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் பழசும், புதுசுமான அந்த ஒரு டஜன் நடிகைகள்!


நடிகைகள் மீது தீராத காதல் ‌கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களே அப்புறமென்ன? நமது 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலை, புதிதாக பிறக்கும் ஆண்டில், தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே சொல்லுங்கள்...!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget