கொலவெறி பாடலின் மூலம் பெரும் புகழ்பெற்றவர் நடிகர் தனுஷ். பிரதமர் விருந்து, ரத்தன் டாடா விருந்து, நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினர் என ஒரே பிஸி. இவ்வளவு பிஸி கமிட்மெண்ட்ஸ் இருந்தாலும் இரவு நேர பார்ட்டிகளிலும், பிறந்த நாள் பார்ட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.
தனுஷ்-ஸ்ருதி நடித்துக் கொண்டிருக்கும் ’ 3 ’ படத்தில் நடித்த காதல் காட்சிகளின் விளைவால், அவர்கள் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் தெரிகிறது.
“ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு வேதனையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா என்று பாருங்கள். நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணிக்கொள்ளலாம் என்றாலும் சரி” என்று சற்று கோபத்துடனே ரஜினி வீட்டார் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தன்னைச் சந்திக்க மண்டபத்திற்கு வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ள ரஜினியை பார்த்து . “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை.
ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது.ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்று கஷ்டப்பட்டுள்ளார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.
இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாதாக தெரிகிறது.
ஸ்ருதி மும்பையில் ஒருவருடன் சிறிது காலம் வாழ்ந்து வந்தார், அதன் பிறகு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து வந்துவிட்டார் என்றும் பேசப்படுகிறது.
‘3’ படத்திற்காக ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று தான் ஐஸ்வர்யாவின் பிறந்த நாள். ஐஸ்வர்யாவின் பிறந்தநாளன்று, அவரை தனியே விட்டுவிட்டு தனுஷ் ஸ்ருதியுடன் ட்ரிங்க்ஸ் பார்ட்டிக்கு போய்விட்டாராம். இதையறிந்த ரஜினி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.
பிறந்த நாள் பார்ட்டியில் இளம் நடிகைகளுடன் ட்ரிங்க்ஸ் பண்ணியபடி நடனமாடிய செய்தியை அறிந்த ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் இடையே உண்மையிலேயே கொலவெறி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் முன்னர் “யாரடி நீ மோகினி” படத்தில் நடித்த போது நயன்தாராவுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து, அவரை கிண்டியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து தங்க வைத்தார் என்று தெரிந்த போதே ரஜினி கண்டித்திருக்கிறார். அது நடந்து ரொம்ப நாள் ஆகிறது.
இந்த செய்திகளை பற்றி கேட்ட போது ஸ்ருதிஹாஸன் “இந்த செய்திகள் உண்மை இல்லை. தனுஷ் எனக்கு தொழில் ரீதியான நண்பர். ஐஸ்வர்யாவும் எனக்கு நல்ல தோழி. நல்ல குடும்ப நண்பர்களை இவ்வாறு இணைத்து பேசுவது நல்லதல்ல. சென்ற புத்தாண்டை நான் என் குடும்பத்தினருடன் கோவாவில் கொண்டாடினேன். திருமணமான ஒரு நபருடன் என்னை இணைத்து பேசுவது தவறு.” என்று கூறியுள்ளார்.