பூகம்பத்தை கிளப்பும் பவர் ஸ்டார்?


தமிழ் சினிமா வரலாற்றில் என் படம் லத்திகா 250-வது நாளை நோக்கி வெற்றிநடைபோடுகிறது என்று அசால்ட் பண்ணுகிறார் பவர் ஸ்டார்(!) ஸ்ரீனிவாசன்.  அடுத்தாக “ஆனந்த தொல்லை” படம் வெளிவரப் போகிறது.  
ஆனந்த தொல்லை படத்தில் நான் கொடூர வில்லனாக அறிமுகமாகிறேன்.
அந்த கேரக்டரின் மூலம் தமிழ்த் திரையுலகில் நிரந்தர இடத்தை பிடிப்பேன் என்று பூகம்பம் கிளப்புகிறார் பவர் ஸ்டார்(!).


ஆனந்த தொல்லைக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை, மன்னவன், மனுஷன், படைத்தலைவன், சீனு "MA.BL" என வரிசையாக அவர் நடிக்கும் படங்களின் டைட்டிலில்களை கேட்டால்.....இப்பவே கண்ணகட்டுதே! ஷ்ஷ்ஷ்ஷ்ஷபா... 


சமீப நாட்களாக ஃபேஸ் புக்கில் ஒரு புகைப்படம் கலக்கிக் கொண்டிருக்கிறது...


கடந்த 23ம் தேதி சென்னையிலுள்ள நாரத ஞான சபாவில் ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல அரசியல் பிரமுகர்களும், நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர். தமிழக ஆளுனர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமூகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், கமல்ஹாசன், ஸ்நேகா என திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர். லத்திகா படத்தின் வெற்றி நாயகன் ( அத அவரே சொல்லிக்கிறாருன்னா பாருங்களேன்...) பவர் ஸ்டார்(!) டாக்டர் சீனிவாசனும் விழாவுக்கு வந்திருந்தார். 


விழா முடிந்ததும் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் பவர் ஸ்டார் கமலை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்ராம் பவர் ஸ்டார் (!).
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget