ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது வீட்டில் திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்ததால் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவர் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததால் கஞ்சா உள்ளிட்டவற்றை சேர்த்து பிடித்தாரோ என்று சந்தேகம்
எழுந்தது. ஆனால் அவர் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும் நைட்ரஸ் ஆக்ஸைடை நுகர்ந்ததால்தான் மயக்கமும், வலிப்பும் வந்ததாக கூறப்படுகிறது.
49 வயதாகும் டெமி மூர் தனது லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் புகை பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பும், மயக்கமும் வந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவசர போலீஸாருக்குப் போன் போனது.அவர்கள் மருத்துவப் படையினருடன் விரைந்து வந்து டெமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் புகை பிடித்ததால் மயங்கி விழவில்லை என்றும் அருகில் இருந்த ஒரு கேனிலிருந்து வெளியான சிரிப்பூட்டும் வாயு எனப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு கசிந்து அதை நுகர்ந்தாதல்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது டெமியுடன் அவரது தோழி ஒருவரும் உடன் இருந்தார்.