செல்போன்ல பேசரது போர்க் குற்றமா! என்ன கொடுமை சார் இது!!


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது
என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


வெளிநாடுகளில் உள்ள வடகொரிய அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எவரும் தகவல் அனுப்பிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இதேபோல் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் அடைக்கலம் கோருவோருக்கு வெளியில் இருந்து தகவல்கள் கிடைப்பதையும் தடுக்கும் நோக்கத்தில் வடகொரிய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.


இருப்பினும் அண்டை நாடான சீனாவுக்குள் அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வடகொரிய அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget