4. செங்காத்து பூமியிலே
இந்த புதிய படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை மட்டும் வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
3. வேட்டை
கமர்ஷியல் ஹிட் என்று ஆர்ப்பட்டம் போட்ட வேட்டை மூன்று வாரங்களில் 3.2 கோடிகளை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 11.7 லட்சமாக இறங்கியுள்ளது. பலருக்கும் இந்தப் படம் நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.
2. நண்பன்
நண்பன் சென்னையில் இன்னும் ஸ்டராங்காகவே உள்ளது. சென்ற வார இறுதியில் 31 லட்சங்களை வசூலித்த இந்தப் படம் இதுவரை சென்னையில் 7.2 கோடிகளை வசூலித்துள்ளது.
1. மெரினா
பாண்டிராஜின் இப்படம் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல் மூன்று தினங்களில் எந்த பெரிய நட்சத்திரங்களும் இன்றி சென்னையில் 46.8 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. பாண்டிராஜ் என்ற இயக்குனர் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை இந்தப் படத்தில் அவர் காப்பாற்றத் தவறிவிட்டார் என்பது சோகம்.