கூகுள் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒன்று. இதில் புதிதாக கூகுள் குரோம் பீட்டா என்ற வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். தொழில் நுட்ப உலகில் அதிக சாதனைகளை செய்து வரும் கூகுள் ஒரு புதிய வெர்ஷனை உருவாக்கிய
பெருமையையும் தட்டி செல்கிறது.
இந்த தொழில் நுட்பத்தினை கூகுள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த புதிய குரோம் பீட்டா வெர்ஷன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனிலும், டேப்லட்டிலும் மட்டுமே இந்த குரோம் பீட்டா வெர்ஷன் பயன்படுத்த முடியும். இந்த புதிய தொழில் நுட்பம், கூகுளின் அடுத்த புதிய சாகசம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.