ஐ.சி.சி. டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 10வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சு வரிசையில் ஜாகீர்கான் 697 புள்ளிகளுடன் தொடர்ந்து 10வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டி அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை வீரர் சங்ககரா முதலிடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் 2வது இடத்திலும், ஆஸ்ட்ரேலியா வீரர் கிளார்க் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியாஸ் 4வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் 5வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து வீரர் அலிஸ்டர் குக் 6 வது இடத்தையும், இலங்கை வீரர் சமரவீரா 7வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சந்தர்பால் 8வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா வீரர் அம்லா 9வது இடத்தையும், 10வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் அசார் அலியும், இந்திய வீரர் சச்சினும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சு தரவரிசையில் முதலிடம் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா ), 2ஆம் இடம் அஜ்மல் (பாகிஸ்தான்), 3ஆம் இடம் ஆண்டர்சன் (இங்கிலாந்து), 4ஆம் இடம் ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), 5 ஆம் இடம் பீட்டர் சிடில் (ஆஸ்ட்ரேலியா), 6ஆம் இடம் ஸ்வான் (இங்கிலாந்து), 7 ஆம் இடம் அப்துர் ரகுமான் (பாகிஸ்தான்), 8 ஆம் இடம் ஹில்பென்ஹாஸ் (ஆஸ்ட்ரேலியா), 9ஆம் இடம் மார்னே மார்கல் (தென் ஆப்பிரிக்கா), 10 ஆம் இடம் ஜாகீர்கான் (இந்தியா)