இளைஞர்களின் சிந்தையை காதலில் சொதப்புவது எப்படி – திரை விமர்சனம்


பட டைட்டிலேயே படத்தின் முழுக்கதையும் சொல்லிவிடலாம். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது இந்த காதல். இன்றைய காதலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காதலை எப்படி சொதப்புகிறார்கள் என்பதை மிக தெளிவாக, நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் படம் தான் இந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’.



படத்தின் கதை :


படத்தின் ஹீரோ அருண் (சித்தார்த்), தன்னுடைய காதலில் எப்படி சொதப்பினேன் என்பதை பிளாஸ்பேக்கில் ஆரம்பிக்கிறார். அருண் என்கிற சித்தார்த்தும், பார்வதி என்கிற அம்லா பாலும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். எதிர்பாரவிதமாக இவர்களிருவரும், கல்லூரி கேன்டீனில் சந்திக்கிறார்கள். இவர்களின் முதல் சந்திப்பே இவர்களை நண்பர்களாக்கியது. பிறகு இந்த நட்பு வளர்ந்து கொண்டே வந்து காதலாக மாறியது. ஆனால் இவர்களிருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள்.


கல்லூரி விடுமுறை நாட்களில் இவர்கள் பிரிய நேரிடுகிறது. அப்போது இருவரும் தங்களின் காதலை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து பிரிந்து விடுகிறார்கள். விடுமுறைக்கு பிறகு ஒரு நிலையில் இவர்கள் தங்கள் காதலை பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் பிறகு இவர்களுக்குள் நடக்கும் சின்ன, சின்ன சண்டைகள் மற்றும் இவர்களுக்குள் ஏற்படும் மனக்கருத்து வேறுபாடுகள் இவர்கள் பிரிந்து விடும் சூழ்நிலை ஏற்ப்படுகிறது.


இதற்கிடையில் பார்வதியின் அப்பாவாக வரும் சுரேஷ் பிஸினெஸ்மேன் என்ற போர்வையில் ஊதாரித்தனமாக இருக்கிறார். ஆனால் இவருடைய மனைவி இரயில்வே டிபார்ட்மெண்டில் பணியாற்றுகிறார். இவருடைய வருமானத்தை வைத்தே பார்வதியின் குடும்பம் இருக்கிறது. ஒரு சூழ்நிலையில் பார்வதியின் அம்மாவும், அப்பாவும் டைவர்ஸ்க்கு அப்ளை செய்கிறார்கள். இதனால் மனமுடைந்து போகிறார் பார்வதி.


அருணுக்கும், பார்வதிக்கும் ஏற்ப்படும் சண்டைகள் என்னென்ன..? கடைசியாக இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? பார்வதியின் அப்பா, அம்மாவிற்கு டைவர்ஸ் கிடைத்ததா, இல்லையா...? என்பது தான் கிளைமாக்ஸ்....


படத்தின் நிறை – குறைகள் :


கல்லூரி மாணவனாக தோன்றிய சித்தார்த்தின் நடிப்பு நன்றாக இருந்தது. தன் காதலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞனாக சித்தார்த் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. பார்வதி பாத்திரத்திற்கு கன கச்சிதமாக பொருந்துகிறார் நடிகை அமலா பால். இவர்களின் நடிப்பு கதைக்கு பக்க பலமாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுரேஷின் நடிப்பும் பிரமாதம். படத்திற்கு தமனின் இசை சுமார் ரகம் தான். இயக்குனர் பாலாஜி மோகன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு கையில் எடுத்திருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம். மற்ற டெக்னீஷியன்கள் அவரவர்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


பொதுவாக இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் படம் நன்றாக பேசப்படும் என்பதில் ஐயமில்லை..

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget