இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாகி கொண்டு இருப்பதால் மக்கள் மிகுந்த பரபரப்போடு எதிர் பார்த்திருந்த பட்ஜெட் நிலவரம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மொபைல்களுக்கான கட்டணம் 10 முதல் 12 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிரமாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தொழில் நுட்ப தேவைகள் அதிகமாகி கொண்டே போவதால், நவீன வசதிகள் கொண்ட மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் வெளி நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நிலவரத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மொபைல்களின் விலை
உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் மக்களுக்கு ஆறுதலான விஷயமும் ஒன்று இருக்கிறது. குறைந்த விலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல்களுக்கு விலை குறைக்கப்பட்டு இருப்பது உண்மையிலேயே ஒரு சிறப்பான விஷயம் தான்.