மாணவனை கடத்திய ஆசிரியை கைது!


சென்னையில் பதினோரம் வகுப்பு மாணவனுடன் ஊரைவிட்டு சென்ற அறிவியல் ஆசிரியை டெல்லியில் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் குமுது. இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு ஒரு குழந்தை உள்ளது. இவர் யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அதே பள்ளியில் யானைகவுனி பி.கே.பி. லைனை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் 17 வயது மகன் பிளஸ்-1
படித்து வந்தான். கடந்த 4ம் தேதி ஆசிரியை குமுது மாணவன் சரவணக்குமாருடன் ஊரை விட்டு தலைமறைவாகிவிட்டார். 


ஏற்கனவே சரவணக்குமாருக்கு ஆசிரியை குமுது பாலியல் தொல்லை தருவதாக யானைக்கவுனி போலீசில் சரவணக்குமாரின் தந்தை புகார் செய்து இருந்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஆசிரியை குமுதுவையும் மாணவனையும் திடீரென காணவில்லை. தனது மனைவியை காணவில்லை என ஆசிரியை குமுதுவின் கணவர் எம்.கே.பி.நகர் போலீசில் புகார் செய்தார். 


அதேபோன்று, மாணவனின் தந்தை சரவணக்குமார் யானைகவுனி போலீசில் புகார் செய்திருந்தார். அதில், ஆசிரியை குமுது தனது மகனை கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதைதொடர்ந்து பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் குமார் தலைமையில் யானைகவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


இந்த நிலையில் ஆசிரியை குமுது டெல்லியில் இருந்து சென்னையில் உள்ள தனது சகோதரியுடன் டெலிபோனில் பேசினார். அப்போது தனது செலவுக்கு பணம் இல்லை. தனது வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யும்படி கேட்டு கொண்டார். இதை அறிந்த போலீசார் உடனடியாக டெல்லி சென்றனர். அங்கு மாணவனுடன் பதுங்கி இருந்த ஆசிரியை குமுதுவை கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். 


பூக்கடை போலீஸ் நிலையத்தில் வைத்து ஆசிரியை குமுது மற்றும் மாணவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget