மொபைல் போனுக்கான அதிவேக டால்பின் பிரவுசர் மென்பொருள்!


இந்த பிரவுசர் டெஸ்க்டாப் ஸ்டைலில், டேப் வழி பிரவுசிங், ஸ்பீட் டயல் மற்றும் அருமை யான இன்டர்பேஸ் ஆகியவற்றையும் தருகிற்து. இதனை இயக்கும் வழி குறித்து இங்கு பார்க்கலாம். தரவிறக்கம் செய்து போனில் பதிந்தவுடன், இதனை இயக்கவும். உடன் Start now பட்டனில் தட்டவும். அடுத்து கிடைக்கும் Terms of Use திரையில் Accept பட்டனைத் தட்டவும். அடுத்து உங்கள் ராஜ்ஜியம் தான். அடுத்து On demand Flash Support என்பதை நான் தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து Perform as Android Phone என்பதையும் என் விருப்பமாகத்
தேர்வு செய்தேன். பின்னர் Add shortcuts to the home screen என்பதில் செக் அடையாளத்தை அப்படியே விட்டுவிட்டேன். அடுத்து கிடைத்த திரை Import Bookmarks. இதில் Dolphin Connect என்பதை நான் தேர்ந்தெடுக்கவில்லை. 
அடுத்த திரையில் slide features விளக்கப்பட்டிருந்தது. இங்கு இடது கீழ் புறம் கிடைக்கும் ஸ்டார் தட்டி புக்மார்க் மற்றும் ஸ்பீட் டயலுக்கான தகவல்களை அமைக்கலாம். புக்மார்க் தட்டியபோது Add bookmark டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதே போல Add to Speed Dial டயலாக் பாக்ஸும் கிடைக்கும். இரண்டிலும் தகவல்களை நிரப்ப வேண்டியதுதான். இறுதியாக ஓகே கிளிக் செய்திட வேண்டியதுதான். அவ்வளவுதான்; உங்கள் பிரவுசர் இயங்க அனைத்தும் ரெடி. டால்பின் பிரவுசர் தொடக்க பக்கத்தில் இரண்டு டேப் மற்றும் நான்கு ஸ்பீட் டயல் பட்டன்கள் கிடைக்கின்றன. அட்ரஸ் பாரின் இடது பக்கத்தில் Home பட்டன் உள்ளது. Refresh பட்டன் வலது பக்கத்தில் உள்ளது. புதிய டேப் வேண்டும் எனில் மேலாக வலது பக்கத்தில் உள்ள + பட்டனைத் தட்ட வேண்டும். நான் ஸ்பீட் டயலில் பல தளங்களை இணைத்தேன். Speed Dial பட்டனில் தொடர்ந்து அழுத்தினால், அதில் ஏற்கனவே பதிந்தவற்றை எடிட் செய்திட அல்லது நீக்கிட முடிகிறது. அசைவுகளுக்கான வடிவமைப்பை உருவாக்கி அதனை ஓர் இணைய தளத்திற்கான ஷார்ட் கட் வழியாக அமைக்க முடிகிறது. நாமாக ஓர் அசைவு கட்டத்தை உருவாக்க, Gesture பட்டனில் டேப் செய்து, பின்னர் Draw a gesture என்பதில் டேப் செய்திட வேண்டும். Gesture settings பிரிவில் இதில் அமைக்கப்பட்டுள்ள பட்டியலை நாம் பரிசீலனை செய்திட முடியும். அல்லது New Gesture அழுத்தி புதிய வடிவமைப்பை உருவக்கலாம். 
இன்னும் இந்த இடைமுகத்தில் உள்ள செட்டிங்ஸ் சென்று, பல வசதிகளைப் பயன்படுத்தும் வழிகளை அறிய முடியும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget