இந்த நாளில் பிரசவம் நடைபெறும்' என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், `இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும்' என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு, தோராயமாகவே பிரசவ தேதி கணிக்கப்படுகிறது.
ஆனாலும், பிரசவத்துக்கான அறிகுறியாக, இயற்கையே `பிரசவ வலி, ஷோ, பனிக்குடம் உடைவது' ஆகிய மூன்று சமிக்ஞைகளை எழுப்புகிறது. ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடு காரணமாக வருவது. இது மாதவிலக்கு நேரத்தில் வருவதுபோல் இருக்கும். அதாவது இடுப்பின் மேலிருந்து கீழாக, வலி எடுக்க ஆரம்பிக்கும்.
இவை தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே விட்டுவிட்டு வலிக்கும். பிரசவவலி என்றால் பொதுவாக `பத்து நிமிடம், இருபதுநிமிடம்' என்று விட்டு விட்டு தான் வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்கூட, வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
வலி ஏற்பட்டவுடனே, இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது. கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். அப்போது உடனே வலி ஏற்பட்டு, பிறகு கருப்பையின் கழுத்து மெல்ல-மெல்ல விரிவடையும்.
அடுத்தபடியாக கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து தலை, நெஞ்சு என்று கொஞ்சம்-கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும். அவ்வளவுதான். கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை. சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவது.
கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித்ததும், அங்கே இந்த திரவம் சுரக்கும். கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்க தொடங்கியதுமே, குழந்தையை சுற்றியிருக்கும் பனிக்குடத்தின் ஒரு பகுதியும் இறங்கும். ஒருவேளை அந்த பலூன் உடைந்துவிட்டால், உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்.
இதை புரிந்துகொள்ளாமல், `எனக்கு அதிகப்படியாக சிறுநீர் வெளியேறுகிறது' என்று பெண்கள் தவறாக நினைக்கிறார்கள். வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே, உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குடநீரும் வழிந்து, பிரசவத்தை சிக்கலாக்கி விடும்.
பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக மஞ்சள்-பழுப்பு வண்ணத்தில் இருந்தால், `உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது' என்று அர்த்தம்! அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும்.
பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக-சுகமாக நடைபெற உதவும்.
பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும்.
அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால், டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார். கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின், வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும்.
இதற்கு மகப்பேறு மருத்துவத்தில் `எபிசியோட்டமி' என்று பெயர். பெரும்பாலும் முதல் குழந்தை பெறும் பெண்களுக்குதான், இப்படி செய்வார்கள். குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும். கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாகவும் வெளியே வரும்.