இந்த மாத இறுதியில் 8 மில்லியன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கின் புதிய டைம்லைன் பக்கத்திற்கு மாற இருக்கின்றன. சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக் புதிய டைம்லைன் பக்கத்தை அறிமுகம் செய்ய இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏராளமான பிராண்டுகள் தங்களுக்கு பிரத்யேக ஃபேன்புக் பக்கத்தில் டைம்லைன் வசதியை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஃபேன்புக் பக்கத்திற்கு புதிய டைம்லைன் வசதியை ஃபேஸ்புக் வழங்க உள்ளது. இந்த மாத இறுதியில்
புதிய டைம்லைன் வசதியை ஃபேஸ்புக் வழங்க உள்ளது. எனவே, புதிய டைம்லைன் பக்கத்திற்கு 8 மில்லியன் நிறுவனங்கள் மாற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஃபேஸ்புக்கின் டைம்லைன் பக்கம் மூலம், பிராண்டுகளின் மார்கெட்டை இன்னும் உயர்த்த முடியும். இதனால் ஃபேஸ்புக் டைம்லைனின் பிராண்டு பக்கத்தை இன்னும் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்க உள்ளது ஃபேஸ்புக். ஆரம்பத்தில் இந்த டைம்லைன் பக்கம் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்று சிலரால் கருதப்பட்டது.
இன்று அதிக பேர் ஃபேஸ்புக்கில் டைம்லைன் பக்கத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, புதிய வசதிகளுடன் புதிய டைம்லைன் பக்கத்தை ஃபேஸ்புக் விரைவில் வெளியிடுகிறது. ஃபேஸ்புக்கின் வருவாய்க்கு ஃபேன் பேஜ் மற்றும் டைம்லைன் வசதி முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு மட்டும் விளம்பர வருவாய் வாயிலாக ரூ.18,500 கோடியை ஃபேஸ்புக் ஈட்டி இருக்கிறது. எனவேதான், ஃபேன் பக்கத்திற்கு ஃபேஸ்புக் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
டைம்லைன் பற்றிய தொடர் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.