ரோவியோ நிறுவனம் வெளியிட்டு வெற்றி கண்ட ஆங்கிரி பேர்ட்ஸ் அப்ளிக்கேஷனில் புதிதாக ஸ்பேஸ் என்ற லெவல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்பேஸ் அப்ளிக்கேஷன் விண்டோஸ் போன் இயங்குதளத்திலும் இனி பெற முடியும் என்பது, விண்டோஸ் போன் ஓஎஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான செய்தி.
இந்த விளையாட்டில் முன்பு இருந்ததை விட கூடுதலான 60 லெவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் அதிக ஸ்வாரசியத்துடன் விளையாட முடியும். அனைவராலும் அதிகம் விரும்பப்பட்டதனால், இந்த ஆங்கிரி பேர்ட்ஸ கேம் ஃபேஸ்புக்கிலும் இடம் பெற்றது.
இதுவரை 70 கோடி தடவைக்கு மேல் டவுன்லோட் செய்யப்பட்ட இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேமில் இப்போது அதிக லெவல் கொடுக்கப்பட்டுள்ளதால், இதன் டவுன்லோடின் எண்ணிக்கை பல மடங்காக குவியும்.