மனித உரிமை என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்களின் கை, கால்களை உடைப்பேன் என இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். ஜெனிவாவில் சமீபத்தில் நடந்த ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா, சில பத்திரிக்கையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில்,
வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிரான பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அத்தகையோரின் கை கால்கள் முறிக்கப்படும் என்று ஆவேசத்துடனும், ஆணவத்துடனும் பேசினார்.
வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிரான பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அத்தகையோரின் கை கால்கள் முறிக்கப்படும் என்று ஆவேசத்துடனும், ஆணவத்துடனும் பேசினார்.