ஒபாமாவை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஒசாமா! பரபரப்பு தகவல்!!


அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், தனது இறுதி நாட்களில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கொல்லவும், அமெரிக்க மண்ணில் மற்றொரு தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.என்.என்., செய்தி நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் பீட்டர் பெர்கன் இதுகுறித்து எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த 2010, அக்டோபரில்,
ஒசாமா தனது துணைத் தளபதி ஒருவருக்கு எழுதிய கடிதக் குறிப்பு ஒன்றில், ஒபாமாவை கொன்று விட்டால், அவருக்குப் பின் துணை அதிபராக உள்ள ஜோ பிடன் அதிபராகிவிடுவார் என்றும், அவர் அதிபர் பதவிக்கு இன்னும் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அல் - குவைதா துணைத் தலைவர் அய்மன் அல் ஜவாகிரி, அமெரிக்க மண்ணின் மீதான மற்றொரு தாக்குதல் நடத்துவதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். அமெரிக்க மண்ணில் அமெரிக்க வீரர்களைத் தாக்குவதை விட அவர்களை ஆப்கன் மண்ணில் தாக்குவது தான் எளிது என ஒசாமாவிடம் அவர் கூறினார்.
அதோடு, பாகிஸ்தானின் வஜீரிஸ்தான் பகுதியில் அமெரிக்க தாக்குதல் தொடர்வதால், அது நீண்ட நாளைக்கு அல் - குவைதாவினரின் பதுங்கிடமாக இருக்காது எனவும் ஒசாமா தெரிவித்திருந்தார். அதனால் அங்கிருந்து, ஆப்கனின், கஜினி, ஜாபூல், குனார் ஆகிய மாகாணங்களுக்குத் தப்பிச் செல்லும்படி அல் - குவைதாவினருக்கு அறிவுறுத்தினார். மேலும், தன் மகன் ஹம்சா, 20, எப்படி அமெரிக்க கண்காணிப்பில் இருந்து தப்ப வேண்டும் என்பது விலாவாரியாக எழுதியிருந்தார். மொபைல்போன், இணையதளம் மூலமல்லாமல் கடிதம் மூலம் மட்டுமே தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இவ்வாறு பெர்கன் எழுதியுள்ளார்.
பாக்., அபோதாபாத்தில் ஒசாமாவின் வீட்டில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர். அவற்றில் இருந்து விவரங்களின் அடிப்படையில் பெர்கன் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget