பில்லா 2 படத்துக்குப் பிறகு தான் அடுத்து நடிப்பது, ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கும் படம்தான் என்பதை உறுதி செய்தார் நடிகர் அஜீத். அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம் பில்லா. இந்தப் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இப்போது தயாரிப்பில் உள்ள பில்லா 2 படத்தை இயக்கவிருந்தவர் விஷ்ணுவர்தன்தான். ஆனால் சில காரணங்களால் படம்
சக்ரி டோலெட்டி கைக்குப் போனது.
இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த யூகங்கள் பல வெளிவரத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அஜீத் கூறுகையில், "ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன்.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் ஆர்யாவும் நடிக்க உள்ளார். இது மங்காத்தா படம் போல அமையும். எனது வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார் அஜீத்.
விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு, விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளேன்," என்றார்.