படம் ஓடுகிறதோ இல்லையோ... இவ்ளோ கோடிக்கு விலை போனது என்று சேதி சொல்வதில் மட்டும் படம் சம்பந்தப்பட்டவர்கள் குறை வைப்பதில்லை. இப்போது மாற்றானின் முறை. ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி வாங்கியுள்ளது. இப்போது படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் வாங்கியிருக்கிறது. இதுவரை சூர்யாவின் எந்தப் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டதில்லை என்கிறார்கள். நாம் அறிந்தவரை ஜெமினி வெளிநாட்டு உரிமைக்காக தந்தது 12 கோடியாம்.
எப்பிடிப்பா திருப்பப் போறீங்க?