தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள்... இதோ என் பதில்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை, என்றார் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரிய நமீதா. நிறைய நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், தெலுங்கு, கன்னடப் படங்களில் படுபிஸியாக இருந்தாலும், தமிழில் ஒரு அசத்தலான கதை கிடைக்கவில்லையே
என்ற ஆதங்கம் நமீதாவுக்கு உள்ளது.
இந்த நேரத்தில்தான் எங்கே போனாலும், தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நீங்கள் நடிக்கவில்லையா... நடிப்பீர்களா... உங்களை அணுகினார்களா? என்றெல்லாம் அவரை கேட்டுத் துளைக்கிறார்களாம்.
சரி.. அதற்கு நமீதா பதில் என்ன?
நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன்.... என்னிடம் கேட்டால் கண்டிப்பாக அந்தப் படத்துக்கு கால்ஷீட் தருவேன். இந்தியில் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு விஷயம் சொல்லட்டுமா... சில்க் ஸ்மிதா வேடத்துக்கு என்னைவிட பொருத்தமான நடிகை இருக்க முடியுமா தெரியவில்லை. அந்த கேரக்டரை அந்த அளவு விரும்புகிறேன்.
இப்போது உடம்பை இன்னும் ஃபிட்டாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளேன். சில நாட்கள் கழித்து என்னைப் பார்ப்பவர்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவார்கள்," என்றார்.
தென்னிந்திய நடிகைகளில் உங்களுக்குத்தான் அதிக ரசிகர்களாமே... உண்மையா?
இருக்கலாம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம்தான் இருப்பாங்க. தெலுங்கு, கன்னடம் என்று வேறு மொழிகளில் நடித்தாலும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவுமே ஸ்பெஷல். அவங்க எனக்கு கொடுத்துள்ள இடம் உயர்வானது.