உலகில் வேறு பெண்களே இல்லை? செக்சியான பெண், செக்ஸியான உதடு என்று எப்போது வாக்கெடுப்பு நடத்தினாலும் ஒரேயொருவரே அடுத்தடுத்து ஜெயிக்கிறார்கள். செக்ஸியான உதடுக்கு எப்போது பார்த்தாலும் ஏஞ்சலினா ஜோலிதான். அதைவிட்டால் கத்ரினா. கடைத்தெருவிலே அதைவிட செக்ஸியான உதடுகளை நாள்தோறும் பார்க்கலாம். ஓ... அவர்களை நமக்குதானே தெரியும், உலகத்துக்கு தெரியாதே.
எஃப்ஹெச்எம் பத்திரிகை இந்தமுறை நடத்திய செக்ஸியான பெண் வாக்கெடுப்பிலும் ஜெயம் கத்ரினா கைஃபுக்குதான். இந்தமுறையும் என்றால்...? அக்காதான் முந்தைய மூன்று முறையும் சாம்பியன்.
நாலாவது முறையும் நானா என்று ஆச்சரியத்தில் வாய் திறக்கும் கத்ரினா எது செக்ஸி என்று ஒரு விளக்கம் தந்திருக்கிறார் பாருங்கள், படித்தால் செத்தீர்கள். செக்ஸி உடையில் இல்லை, அதை மெயின்டெயின் பண்ண முடியாது, மேக்கப் இல்லாமல் காட்டன் புடவையில் நான் வந்தாலும் செக்ஸிதான்...
அக்காவோட காஸ்மெடிக் செலவை பார்த்தால் தெரியும் இது எவ்வளவு பெரிய அண்டப்புளுகு என்பது.