வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் 'புதுமுகங்கள் தேவை'. இந்தப் படத்தில் சிவாஜிதேவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். இவர் மழை, லீ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதாநாயகியாக பானு மற்றும் விஷ்ணு பிரியா நடிக்கிறார்கள். கவிபாரதி வசனம் எழுத கதை, திரைக்கதை வேலையை எஸ்.ஏ. அபிமான்
கவனிக்கிறார். ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ், மனீஷ்பாபு இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகிறார்;
இரண்டரை மணி நேரம் படம் பார்க்க வருகிறவர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் இது. சினிமாவுக்குள் சினிமா. இது சினிமா பற்றிய கதை. சிவாஜி தேவ் உதவி இயக்குனராக சினிமாவில் இருப்பவர். அவரது லட்சியம் தான் இயக்குனராகி விடவேண்டும் என்பதுதான்.
ராஜேஷ் யாதவ் ஒரு ஹோட்டலில் சூப்பர்வைசராக இருக்கிறார். எப்படியாவது தயாரிப்பாளராகி விடவேண்டும் என்பது அவரது லட்சியம். ஆனால் ஒரு பைசா கூட கிடையாது. லட்சியங்களை மனதில் சந்தித்து படம் தயாரிக்க நினைப்பதுதான் 'புதுமுகங்கள் தேவை' படத்தின் கதை என்றார்.