அஜீத் குமாருக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறதாம். அஜீத் குமார் பெரும்பாலும் நகரத்து கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். தொடர்ந்து நகரத்து கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவருக்கு கிராமத்து மனுஷனாக நடிக்க ஆசையாக உள்ளதாம். அவர் தனது ஆசையை நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் தெரிவி்ததுள்ளாராம்.
ஏ.எல்.விஜய், வசந்த், ஏ.ஆர். முருகதாஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அஜீத்துக்கு நெருக்கமான இயக்குனர்கள் ஆவர். இதில் யார் அவரின்
ஆசையை நிறைவேற்ற தயாராக உள்ளார்கள் என்று தெரியவில்லை.
நான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்க அஜீத் குமார் தான் காரணம் என்று அண்மையில் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் குமார் பில்லா 2 படத்தை முடித்துவிட்டு விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பில்லா 2 படம் ஜூன் 22ம் தேதி ரிலீஸாகவிருந்து தள்ளிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.