ஆன்மீகத்திற்கு மாறி விட்டதாக கூறப்பட்ட இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை கன்னடத்தில் நடிக்க போயிருக்கிறார். தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளைப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அதில் ஆண்களை வெறுக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் திடீரென ஆன்மீகத்திற்கு மாறினார். சினிமாவில் தான் பெரும் சிரமப்பட்டு விட்டதாகவும், இங்கு எல்லாமே போலி என்றும் அதிரடியாக கூறிய அவர் சினிமாவால் தான் இழந்தது அதிகம்
என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் மொட்டை போடவும் முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் மொட்டையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் தத்தா. கன்னடத்தில் உருவாகும் ஏனிது மனசல்லி என்ற படத்தில் நடிக்கிறாராம் தத்தா.
இருப்பினும் இப்படத்தில் தத்தாவின் தங்கச்சி இஷிதாதான் அறிமுகமாகிறாராம். முக்கிய வேடத்தில் தத்தாவும் நடிக்கவிருக்கிறார். ஏன் திடீரென மறுபடியும் வந்து விட்டீர்கள் என்று தத்தாவிடம் கேட்டால், என் தங்கச்சி இப்போதுதான் நடிக்க வந்துள்ளாள். அவளுக்கு இது புதுசு. எனவேதான் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறேன் என்றார்.
அது சரி, இவர் பட்ட கஷ்டத்தை, இவரது தங்கையும் படட்டும் என்ற நோக்கில் உதவிக்கு இருக்கிறாரோ என்னவோ...