தெலுங்கில் கிளாமராகும் அமலா பால்!


இழுத்துப் போர்த்தி நடித்து போரடித்து போய்விட்டதால் கவர்ச்சியில் கலக்க முடிவு செய்திருக்கிறார் அமலாபால். தெலுங்கு ரசிகர்களுக்கு கவர்ச்சியாக இருந்தால்தான் பிடிக்கும் என்று காரணம் கூறும் அமலா தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்காக ஆடை குறைப்பில் இறங்கிவிட்டாராம். தமிழில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று அமலாபால் அறிவித்தும் கோலிவுட் இயக்குநர்கள் அவருக்கு இழுத்துப் போர்த்தி நடிக்கும் கதாபாத்திரங்களையே கொடுத்தனர். அவர் நடித்த மைனா, தெய்வத் திருமகள்,வேட்டை
போன்ற திரைப்படங்களில் கவர்ச்சிக்கு வேலை இல்லை. தமிழில் தற்போது நிமிர்ந்து நில், தனுசுடன் சொட்ட வாளக்குட்டி என நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் ராம்சரண் தேஜா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலா. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு தெலுங்கில் ஒரு இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலாபால், எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
தமிழ் ரசிகர்கள் திறமைக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் திறமையுடன் கவர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். எனவே தான் ரசிகர்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார் அமலாபால்.
தமிழ் ரசிகர்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க அமலா?

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget