அஜீத் குமார் தற்போது தத்துவ புத்தகங்களை படித்து வருகிறார். அஜீத் குமாருக்கு ரேசிங் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமின்றி விமான ஓட்ட உரிமம் பெற்றுள்ளார். அண்மை காலமாக அஜீத் குமார் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் நமக்கு தெரியும். அதிலும் குறி்ப்பாக சாய்பாபாவின் தீவிர பக்தனாகிவிட்டார். இந்நிலையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் வாசிக்கிறாராம்.
அது என்ன அப்படி அந்த புத்தகத்தில் உள்ளது என்று நினைக்கிறீர்களா? அது ரேசிங் பற்றிய புத்தகமில்லை தத்துவங்கள் பற்றியது. இத்தகைய புத்தகங்களை படிப்பதால் தான் அவரது மூக்கின் நுனியில் இருந்த கோபம் எங்கோ ஓடிவிட்டதோ?
அண்மையில் அவர் புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தகத்தை ரசித்து படித்துள்ளார். இந்த புத்தகங்களையெல்லாம் படித்து சாந்தமாகியுள்ளதால் தானோ என்னவோ அவருடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் அஜீத் போன்று வருமா என்று புகழ்கிறார்களோ?