களவாணி, வாகை சூடவா பட இயக்குனர் சற்குணம், அடுத்து இயக்கும் படம், "சொட்டவாளக்குட்டி! "பொல்லாதவன், "ஆடுகளம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்தில்; கும்பகோணத்தில், குத்துவிளக்கு செய்து விற்கும் வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இவருக்கும், பல் டாக்டருக்கு படிக்கும் வனரோஜா என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை தான், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்கிறார் சற்குணம். இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, நாசர்,
சாயாஜி ஷிண்டே, சூரி, சிங்கம்புலி, ஸ்ரீமன், சத்யன் என, பலர் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், கதாநாயகி மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
சாயாஜி ஷிண்டே, சூரி, சிங்கம்புலி, ஸ்ரீமன், சத்யன் என, பலர் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், கதாநாயகி மட்டும் இன்னும் முடிவாகவில்லை.