மலையாளத்தில், மிகச் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளில், காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததால், அதை நினைத்து துவண்டு விடாமல், மீண்டும் நடிப்புச் சேவையாற்ற கிளம்பி விட்டார். அனூப் மேனனுடன் தற்போது, "மலபார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, ஜி.எஸ்.விஜயன் இயக்குகிறார். இதில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும், முக்கிய வேடத்தில் நடிப்பதால், மிகவும் உற்சாகமாக காணப்படும் காவ்யா,
"அழுத்தமான கதைக் களம் உள்ள படங்களையே, தேர்வு செய்து நடிக்கப் போகிறேன். அப்போது தான், எவ்வளவு காலமானாலும், ரசிகர்கள் மனதில், காவ்யாவுக்குக்கென நிரந்தர இடம் இருக்கும் என்கிறார்.
"அழுத்தமான கதைக் களம் உள்ள படங்களையே, தேர்வு செய்து நடிக்கப் போகிறேன். அப்போது தான், எவ்வளவு காலமானாலும், ரசிகர்கள் மனதில், காவ்யாவுக்குக்கென நிரந்தர இடம் இருக்கும் என்கிறார்.