நயன்தாராவை காயப்படுத்திய பசுபதி!


பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார் நடிகை நயன்தாரா. பிரபுதேவா விவகாரம் முடிந்த ஒன்றாகிவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். புது இயக்குனர் மோகன் தனது படத்தில் மம்முட்டி-நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சித்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்ததாகவும் மம்முட்டியுடன் நடிக்க சம்மதம்
என்று கூறிவிட்டாராம். ஆனால் மம்முட்டி இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கோடி சம்பளம், கேரள வெளியீட்டு உரிமை... இதுதான் மம்முட்டி போட்ட நிபந்தனை. அதற்கு இயக்குனர் மோகன் சம்மதிக்கவில்லை. மம்முட்டிக்கு பதில் நடிகர் பசுபதியை கதாநாயகனாக தேர்வு செய்தார்.
ஆனால் பசுபதி ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவைக் கேட்டபோது, ஒருபோதும் முடியாது என கோபத்துடன் கூறிவிட்டாராம். நயன்தாராவுக்கு பிடித்தமாதிரி ஒரு நடிகரைத் தேடி வருகிறாராம் இயக்குநர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget