நடிக‌ர் விஜ‌‌‌ய்யை து‌ர‌த்து‌ம் துரதிஸ்டம்!


நடிக‌ர் விஜய் நடி‌த்து‌ள்ள 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை சிட்டிசிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நீடி‌த்து‌ள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிதேவன் என்பவர் செ‌ன்னை 2வது உதவி சிட்டிசிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் தாக்கல் செய்த மனு‌வி‌ல், 'கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' என்ற படத்தை கலைபுலி தாணு தயாரிக்கிறார்.
எனவே 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், எதிர்மனுதாரர்களான கலைபுலி தாணு, தென்னிந்திய திரைப்படம் வர்த்தக சபை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலைபுலி தாணு உள்ளிட்டோர் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மனுதாரர் ரவிதேவன் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, வழ‌க்கு ‌விசாரணையை வரு‌ம் 14ஆ‌ம் தேதிக்கு தள்ளிவை‌த்த ‌நீ‌திப‌தி, அதுவரை துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget