சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்து அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் பல காட்சிகள் வெளிநாடுகாளில் படமாக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியா நாட்டின் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் ‘லிகனி’ பேலஸ் எனும் மாளிகையில் படமாக்கப்பட்டுள்ள முதல்
இந்தியத் திரைப்படம் ‘பில்லா-2’.
லிகனி பேலஸ் ஷூட்டிங்கின் போது சில காரணங்களால் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகள் மறுபடியும் படமாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை பற்றி பில்லா-2 படக்குழுவில் பணியாற்றியவர் கூறும் போது “ அது மறக்க முடியாத தருணம். லொக்கேஷன் பார்க்கச் சென்ற போது பச்சைப்பசேல் என இருந்த இடம் ஷூட்டிங்கின் போது பனிப்பொழிய ஆரம்பித்தது தான் கொடுமை.
படக்குழுவில் இருந்த அனைவரும் மிகவும் தவித்துப் போனோம். ‘0’ டிகிரி வெப்பநிலையில் வேலை செய்ய மிகவும் கடினமாக இருந்தது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் அந்த காட்சிக்கு பனிப்பொழிவு மேலும் அழகை கூட்டியதால் உற்சாகத்துடன் வேலை செய்தோம்” எனக் கூறினார்.
பில்லா-2 அடுத்த மாதம் ரிலீஸாவதால் ஓரிரு வாரங்களில் சென்ஸார் குழுவிற்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்படும் என்பது தான் பில்லா-2 படத்தின் லேட்டஸ்ட் தகவல்.