கல்யாண் ஜூவல்லரி நிறுவன விளம்பரத்தில் ஐஸ்வர்யா முற்றிலும் புத்தம் புதிய பொலிவுடன் தோன்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அவை போட்டோஷாப் வேலை என தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரவசத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் சற்று உடல் பருமானவது வழக்கம்தான். அதே போலத்தான் ஐஸ்வர்யா ராயும் குண்டானார். அவர் உண்டானபோது எப்படி செய்தியாயிற்றோ, அதேபோல அவர் குண்டானதும் கூட பெரும் செய்தியாகிப் போனது.
சமீபத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவின்போதும்
கூட பருமான தோற்றத்துடன்தான் ஐஸ்வர்யா காணப்பட்டார். இந்த நிலையில் தற்போது கல்யாண் ஜூவல்லரி நிறுவன விளம்பரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளதாகவும், அதில் முற்றிலும் எடை குறைந்து படு அழகாக காட்சி தருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதுதொடர்பான படமும் கூட வெளியாகியது. அதில் உண்மையிலேயே ஐஸ்வர்யா படு க்யூட்டான அழகுடன் காணப்பட்டார்.
அவரது முகத்தையும், உடல் பகுதியையும் போட்டோஷாப் மூலம் ஏகப்பட்ட நகாசு வேலைகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உண்மையான ஐஸ்வர்யா ராயா அல்லது ஐஸ்வர்யா ராய் படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கடந்த ஜூன் மாதம் தானத் தனது மகள் ஆரத்யாவுடன் வெளியுலகில் தலை காட்டினார் ஐஸ்வர்யா. அப்போது அவர் குண்டாகத்தான் இருந்தார். ஆனால் ஒரே மாதத்தில் அவருடைய எடை இந்த அளவுக்காக குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தப் புதிய சலசலப்பால் ஐஸ்வர்யா ராய் மறுபடியும் செய்தியாகி விட்டார்....!