கமலுடன், "வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தவர் கமலினி முகர்ஜி. அப்படத்தைத் தொடர்ந்து, "காதல்னா சும்மா இல்ல என்ற படத்திலும் நடித்தவருக்கு தமிழில் படமில்லை. அதனால், தெலுங்கு, மலையாளம் என்று,"பிசியாக நடித்து வந்த கமாலினி, நடிகையாகி, ஏழு வருடங்களுக்கு பிறகு, முதன்முறையாக, தன் தாய்மொழியான வங்க மொழியில், ஒரு படத்தில் நடிக்கிறார். அதோடு, ஒரு படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள கமாலினி முகர்ஜி, அப்படத்திலும் தானே
நாயகியாக நடிக்கிறாராம். அதன் பிறகு, "தென்னிந்திய சினிமாவிலும் இயக்குனராக அவதாரம் எடுப்பேன் என்று சொல்லும் அவர், "நான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் பெண்களுக்கு ஏதேனும் ஒரு, நல்ல தகவல் கண்டிப்பாக இருக்கும் என்கிறார்.