பேராசியர் மீது காதல் வயப்பட்டு, அவரை அடையத்துடிக்கும் மாணவன் கதையுடன் உருவாகி வரும் சாரி டீச்சர் படத்திற்கு ஆசியிர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழ் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்யாமேன், நாயகனாகவும் காவ்யா சிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். டைரக்டர் ஸ்ரீசத்யா இயக்கியுள்ளார். இதில் ஆசிரியை கேரக்டரில் வரும் காவ்யாசிங் ஆபாசமாக நடித்துள்ளார்.
மாணவன், ஆசிரியையும் நெருக்கமான காட்சிகளும் படத்தில் உள்ளன. இப்படத்துக்கு முதலில் ஐ லவ் யூ டீச்சர் என பெயரிட்டு இருந்தார். எதிர்ப்பால் சாரி டீச்சர் என மாற்றப்பட்டது. தெலுங்கில் யு ஏ சான்றிதழுடன் படம் ரிலீசானது. படத்தை பார்த்த ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சியானார்கள். ஆசிரியை, மாணவன் உறவை படத்தில் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் ஆசிரியை கேரக்டரை ஆபாசமாக காட்டியுள்ளதாகவும் கண்டித்துள்ளனர். இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். இந்த எதிர்ப்பை தமிழகத்திலும் இப்படம் சந்திக்கும் என தெரிகிறது.