விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் வேற்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடாக விண்டோசு இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி லினக்ஸ், மாக், விண்டோஸ் போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம்.
வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.
Size:90.07MB |