கோலிவுட் புது வரவு மனீஷாஜித்

கம்பீரம் படத்தில் சரத்குமாரின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனீஷாஜித். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்போது நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாகியிருக்கிறார். அவருக்கு ஜோடி சஞ்சீவ். கே.ஜெயகுமார் என்பவர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: படத்தில் இரண்டு ஹீரோக்கள், ஒருவர் சஞ்சீவ், இன்னொருவர் வர்ஷன். இதில் சஞ்சீவ் படிப்பே வராத மக்கு மாணவர், வர்ஷன் நல்ல படிப்பாளி. ஹீரோயின் மனிஷா பணக்கார வீட்டு படித்த பெண்.
ஹீரோக்கள் இருவருக்குமே மனீஷா மீது காதல். ஆனால் மனீஷாவின் தந்தைக்கோ படித்த மாப்பிள்ளைதான் வேண்டும். படிப்பா, காதலா என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு பதில் சொல்லும் படம். மனீஷாவை குழந்தை நட்சத்திரத்திலிருந்தே தெரியும், இதற்கு முன்பே பல படங்களில் அவரைக் கேட்டார்கள். படித்துக் கொண்டிருந்தால் நடிக்கவில்லை. இப்போது படிப்பு முடிந்து விட்டதால் இதில் நடிக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்றார்.

மனீஷா சீக்கிரமே மனீஷா கொய்ராலமா மாதிரி வாங்க...!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget