சினிமாவில் முன்னேற வேண்டுமென்றால் நடிகர்களின் நடிகையாக இருப்பதைவிட இயக்குனர்களின் நடிகையாக இருப்பதுதான் பெஸ்ட் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் அமலாபால். ஆரம்பத்தில் இந்த சீக்ரெட் சமாச்சாரம் தெரியாமல், முன்னணி ஹீரோக்களை வசப்படுத்தி வைத்துக்கொண்டால் வரிசையாக படங்கள் புக்காகும் என்று எண்ணியிருந்தவருக்கு சீயான் உள்ளிட்ட சில நடிகர்கள் கற்பித்த பாடம் இப்போது பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
அதனால் இப்போதெல்லாம் யாராவது நடிகர்கள் தனது அருகில் வந்து அமர்ந்து கொண்டு உனக்கு நான் படம் சொல்கிறேன். உன்னை நம்பர்ஒன் நடிகையாக்கி விடுகிறேன் என்று அமலாபாலிடம் காதுகடித்தால், அவர்களை கடித்து குதறி விடுவது போன்று பார்க்கிறார். இதுமாதிரி எங்கிட்ட சொல்லி மோசம் செஞ்ச நடிகருங்க நிறைய பேர பாத்துட்டேன். சினிமாவில்தான் நீங்களெல்லாம் ஹீரோ. ஆனா திரைக்கு பின்னாடி வில்லனுங்க என்று சொல்லி விரட்டியடிக்கிறார். அதேசமயம், இயக்குனர்கள் தன்னருகே வந்தால், ஆசை ஆசையாக பேசுகிறார் அம்மணி. அவரது வாய் மணக்கும் பேச்சில் இயக்குனர்கள் சொக்கிப்போய் அமர்ந்திருப்பதை, தூரத்தில் நின்று பார்க்கும் ஹீரோக்கள் செம கடுப்பாகி நிற்கிறார்கள்.