இயக்குனர் பாலா சிறப்பு பேட்டி!

பரதேசி படத்தின் பத்திரிக்கையாளார் சந்திப்பில் பாலாவிடம் சில கேள்விகள்... சினிமாவில் பொதுவாகவே செண்டிமெண்ட் பார்பார்கள். டைட்டிலே பரதேசின்னு இருக்கே? நான் தான் செண்டிமெண்ட் பார்க்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே. கவித்துவமா எனக்கு விளக்கத் தெரியாது. சொந்த இடத்தைவிட்டு வேற இடத்துக்கு போகிறவன் பரதேசி தானே.
விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா - இவர்களில் சிறந்த நடிகர் யார்?
இவங்க எல்லாரையும் விட நான் தான் சிறந்த நடிகன்! உங்க முன்னாடி நல்லவன் மாதிரி நடிக்கிறேன்.  அதனால் சொன்னேன்.

சர்வதேச திரைப்பட விழாவில் ஒரே ஒரு தமிழ் படம் தானே இடம்பெற்றிருக்கிறது. ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனராக அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீகள்?
வருத்தமான விஷயம் தான். நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.

அதர்வாவை இந்த படத்துக்கு தேர்தெடுத்தக் காரணம்?
அது என் கடமை. 

இளையராஜாவை விட்டுவிட்டு ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக போட்டது ஏன்?
இந்த கேள்வியைத்தான் நான் எதிர்பார்த்தேன்! ஒரு புதிய கூட்டணியோடு வேலை செய்யலாமேன்னு நீங்க தான் பத்திரிக்கைகளில் எழுதினீங்க. அதனாலத் தான் இந்த முடிவெடுத்தேன். இதற்கு காரணம் நீங்கதான். 

இந்த படத்தில் யாருக்கு தேசிய விருது கிடைக்கனும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க?
எல்லாருக்கும் கிடைக்கனும்னு தான் நான் ஆசைப்படுவேன். என்ன நடக்கப் போகுதுன்னு யாருக்கு தெரியும்...

இந்த படத்தில் சொல்லவர விஷயம் என்ன? 
எல்லாருமே டீ குடிப்பாங்க. டீ குடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. இந்தப் படத்தைப் பார்த்தால் டீ குடிக்கும் முன்பு ஒரு நிமிடம் யோசிபீங்கன்னு நினைக்கிறேன்.

உங்க படத்தில் நடிக்கிற ஹீரோக்கள் எல்லாரும் பெரிய நடிகராக வலம் வர்றாங்க. ஹீரோயின்கள் எல்லாருமே அந்தப் படத்தோட காணாம போய்விடுகிறார்களே?
அப்படியா சொல்றீங்க! பிதாமகனுக்குப் பிறகு தானே சங்கீதா நிறைய படம் பண்ணாங்க. இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் தன்ஷிகாவும், வேதிகாவும் நல்லா வருவாங்கன்னு நூறு சதவிகிதம் நம்பிக்கையோட என்னால சொல்லமுடியும்.

அவன் - இவன்’ ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்கிற விமர்சனத்தை நீங்க ஏதுக்குறீங்களா?
கண்டிப்பாக. ஆனால் வியாபார ரீதியாக மற்ற படங்களை விட அவன் - இவன் தான் என்னை அதிக அளவில் திருப்திப்படுத்தியது.   

ஒரு குழந்தைக்கு அப்பாவா இருப்பதை எப்படி உண்ர்கிறீர்கள்?
முன்பெல்லாம் என்னிடம் நிறைய வன்முறை இருக்கும். இப்போ கொஞ்சம் சாதுவாகிட்டேன்.

ஒரு அப்பாவா குழந்தைகளை மைய்யப்படுத்தி ஒரு படம் எடுப்பீங்களா?
நல்ல கதை இருந்தா சொல்லுங்க. எடுக்கிறேன்.

ஜி.வி.பிகாஷுடன் பணியாற்றிய அனுபவம்?
நானும் பேச மாட்டேன். அவனும் அதிகம் பேசமாட்டான். அதனால படத்தை முழுசா எடுத்துவிட்டு அவனிடம் போட்டுக்காட்டி பாடல்கள் வாங்கினேன். 

வைரமுத்துக்கூட பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
படம் பார்த்த மூன்றாவது நாள் வைரமுத்து என்னை அழைத்து பாடல்களை கொடுத்தார். பாடல்கள் எழுதிய காகிதங்களை என்னிடம் கொடுத்தவர், இது என் ரத்ததால் எழுதிய வரிகள். இதில் ஒரு வரிகூட மாறக்கூடாது என்றார். எங்க ஊர்காரங்களுக்கு கொஞ்சம் நையாண்டி அதிகம். பேனாவில் எழுதவேண்டியதுதானே. எதுக்கு ரத்ததால எழுதினாரு. ஒருவேளை பேனா மை தீர்ந்துபோச்சோ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். அதை படித்தப்பிறகு தான் தெரிந்தது. உண்மையாகவே  அது ரத்ததால் எழுதப்பட்ட வரிகள். அது பாடல் கேட்கும் போது உங்களுக்கே தெரியும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget