உலக நாயகனின் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு ரத்தானது!

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. கமல்ஹாஸன் கதை எழுதி, இணை தயாரிப்பு, இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் நடிக்கும் ‘விஸ்வரூபம்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளில் நடக்கும் என்றும், மதுரை, கோவை, சென்னை என மூன்று நகரங்களில் ஒரே நாளில் இந்த விழா நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக தனி ஹெலிகாப்டரை கமல்ஹாஸன் அமர்த்தியிருப்பதாக செய்தி வந்தது.

இந்நிலையில், விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதாக நேற்று தகவல் வந்தது. இந் நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் வேறொரு நாளில் இந்நிகழ்ச்சி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட ஜூன் மாதத்திலேயே படத்தின் முதல் பிரதி தயாராகி, கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பப்பட்டது. அதன் பிறகு 6 மாதங்கள் இந்தப் படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்துதான் பேரி ஆஸ்போர்ன் கமலுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget