தற்செயலாக முக்கியமான கோப்புகளை அழித்துவிட்டீர்களா ? உங்கள் கணினி கிராஷ் ஆனபோது ஏதாவது முக்கியமான கோப்புகளை இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம் அதற்கெனவே ஒரு இலவச மென்பொருள் உள்ளது ! அதுதான் புகழ்பெற்ற PIRIFORM நிறுவனத்தின் RECUVA மென்பொருள். இப்பதிவின் கீழே கொடுக்கப் பட்டிருக்கும் லின்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
சிறப்பம்சம்:
நீங்கள் கோப்புகளை சுழற்சி தொட்டியிலிருந்தும், பென் டிரைவ்விலிருந்தும், எம்பி.த்ரீ பிளேயர்களிலிருந்தும், மெமரி கார்டிலிருந்தும் நீக்கிவிட்டிருந்தாலும் சரி அல்லது அதனை பார்மேட் செய்திருந்தாலும் அந்த கோப்புகளை நன்றாக ஆழமாக ஸ்கேன் செய்து மறுபடியும் எந்த சேதமும் இல்லாமல் மீட்டெடுக்கும் இது AUDIO, VIDEO, SYSTEM FILES என எந்த கோப்பாக இருந்தாலும் சரிசெய்கிறது. இவ்வாறுதான் சிலரின் அந்தரங்கமான வீடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள் திருடப்படுகின்றன. இதன் காரணம் நீங்கள் அழிக்கும் கோப்புகள் திரையில் இருந்து மட்டுமே அழிகின்றன. ஆனால் பதிந்த விஷயம் வன்பொருளில் வேறொரு கோப்பு அதன் மேல் பதியும் வரை அப்படியே இருக்கும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:3.27MB |