பட்டத்து ராணியாக வரும் அனுஷ்கா!

தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா, வடநாட்டில் ஜான்சி ராணி போன்று ஆந்திராவில் குறிப்பிடத்தக்க மகாராணி ருத்ரமாதேவி. கி.பி.1259 முதல்1295 வரை வாரங்கல்லை தலைநராக கொண்டு ஆண்ட காகதீர் வம்சத்து அரசி . தெலுங்கு பெண்களில் ரோல் மாடலாக இருக்கிறார். இவரது கதையை தெலுங்கு இயக்குனர் குணசேகரன் கடந்து பத்து ஆண்டுகளாக உழைத்து திரைக்கதையாக வடிவமைத்துள்ளார். இதில் ருத்ரமாதேவியாக யாரைநேடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து இறுதியாக அனுஷ்காவை நடிக்க வைக்க
தீர்மானித்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்துக்க அனுஷ்கா 5 மாதங்கள் கால்ஷீட் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சம்பளம் 2 கோடி என்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். அனுஷ்கா இந்தப் படத்துக்காக குதிரையேற்றம், வாள் சண்டை ஆகியவற்றை கற்கப்போவதாக கூறப்படுகிறது. படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளிலும் 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகிறது. பட்ஜெட் 80 கோடி என்கிறார்கள். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget