ஷெரில் பிரின்டோவை காதலிக்க கருணாஸ், விவேக் போட்டியிடுவதுபோல் ‘மச்சான் படத்துக்காக படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். இது பற்றி அவர் கூறியதாவது: கருணாஸ், விவேக் இணைந்து நடிக்கும் படம் ‘மச்சான் இருவரும் அவரவர் பாணியில் காமெடியில் கலக்குபவர்கள். இது இரட்டை காமெடி விருந்தாக இருக்கும். நண்பர்களுக்குள் மச்சான் என்று அழைத்துக் கொள்வது சகஜம். அதுபோல் நெருங்கிய நண்பர்களாக ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டரில் கருணாஸ், அனிமல் ராஜா கேரக்டரில்
விவேக் நடிக்கின்றனர். இவர் சினிமா ஷூட்டிங்கிற்கு நாய்களை வாடகைக்கு விடும் வேடம் ஏற்றிருக்கிறார்.
நண்பர்களான கருணாஸ், விவேக் இருவரும் ஷெரில் பிரின்டோவை காதலிக்கின்றனர். அவரை கவர்வதற்காக பலவகையில் முயல்கின்றனர். ‘என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சி என்ற டூயட் பாடலில் கருணாஸ், ஷெரில் பிரின்டோ ஆடிப்பாட விவேக்கும் கற்பனையில் ‘மின்சார கனவு பிரபுதேவாவாகவும், ஷெரில் பிரின்டோவை காஜலாகவும் நினைத்து ஆடும் காட்சிகள் நகைச்சுவையாக படமாக்கப்பட்டுள்ளது. டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, வெ.ஆ.மூர்த்தி, பாண்டு, கோவைசரளா, வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. பாலமுருகன் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறினார்.