விஜய் ரசிகர்கள் பல்லைக் கடித்து கோபப்படுவது தெரிகிறது. கூல் பிரதர்ஸ். இது இந்திய அளவிலான பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட். துப்பாக்கி வெளியான அதேநாள் ஷாருக்கானின் ஜப் தக் ஹை ஜான் படமும், அஜய் தவ்கானின் சன் ஆஃப் சர்தார் படமும் வெளியானது. இவை இரண்டுக்கும் இந்திய அளவில் மார்க்கெட். துப்பாக்கிக்கு அந்தளவு இல்லை. ஆனால் கலெக்ஷன்?
ஷாருக்கானின் படம் முதல் நாளில் 15.23 கோடிகளை வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில் 19.54 மொத்தம் 34.77 கோடிகள். சன் ஆஃப் சர்தார் முதல்நாளில் 10.72 கோடிகள், இரண்டாவது நாளில் 16.21 மொத்தம் 26.93 கோடிகள். இவையிரண்டைவிட துப்பாக்கியின் தமிழக திரையரங்குகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. பாதிதான்.
துரதிர்ஷ்டவசமாக துப்பாக்கியின் சரியான முதல்நாள் வசூல் தெரியவில்லை. முதல் நாளில் 9.25 கோடிகள் என்கிறார்கள். என்டிடிவி 10.01 கோடி என்கிறது.
கேரளாவில் முதல் நாளில் 87 லட்சங்கள் வசூலித்திருக்கிறது. இது அங்குள்ள சூப்பர் ஸ்டார்களின் படங்களின் வசூலுக்கு இணையானது. தெலுங்கிலும் படம் பட்டையை கிளப்புகிறது. அந்த வசூல் நிலவரமும் தெரிய வந்தால் சன் ஆஃப் சர்தாரை மிஞ்சும் என்கிறார்கள்.
இந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் என்பதை துப்பாக்கி நிரூபித்திருக்கிறது.