கோலிவுட்டை கதி கலங்க வைத்த ஹன்சிகா!


சினிமாவுக்கு வந்த நேரத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல்தான் ஸ்பாட்டில் பச்சை புள்ளையாட்டம் அமர்ந்திருப்பார் ஹன்சிகா. அதனால் டபுள் மீனிங்கில் பேசி நடிகைகளை வம்புக்கிழுக்கும் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள்கூட ஹன்சிகாவிடம் ரொம்ப டீசன்டாக நடந்து கொண்டனர். ஆனால் அப்படி ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருந்த ஹன்சிகா, தற்போது அது அனைத்தையும் உடைக்கும் வகையில், குளியல் காட்சி, முத்தக்காட்சி என்று புகுந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார்.
சேட்டை படத்தில் உதட்டு முத்தக்காட்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட அவர், அடுத்தடுத்து நடிக்கும் சில படங்களிலும் சூடான முத்தக்காட்சிகள் நடித்து வருகிறார்.

குறிப்பாக, மசாலாக்கதைகளில் நடிக்கும் சில ஆந்திர ஹீரோக்கள் ஹன்சிகாவை கில்மா நடிகையாக்கும் முயற்சியில் வரிஞ்சி கட்டி நிற்கிறார்கள். ஏற்கனவே முட்டி தெரியுற அளவுக்கு அவரை குட்டை பாவாடை நடிகையாக்கினவர்கள் இப்போது அதை இன்னும் கொஞ்சம் கம்மி பண்ணக்கூடிய காஸ்டியூம்களை போடச்சொல்லி ஆட வைக்கிறார்களாம். அதோடு, மழை, தண்ணீர் என்றெல்லாம் ஹன்சிகாவை குளிப்பாட்டி எடுக்கிறார்களாம். ஆனால் அதற்கேற்ப சரியான கூலியையும் கொடுக்கிறார்களாம். அதனால் இதுவரை தெலுங்கில் அடக்கி வாசித்து வந்த ஹன்சிகா, இப்போது தன்னை சுற்றி போட்டு வைத்திருந்த வட்டத்தை உடைத்துவிட்டு வெளியேறி அதிரடி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து நிற்கிறாராம். இதனால் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டுள்ள ஏனைய கவர்ச்சி கதாநாயகிகளெல்லாம் ஹன்சிகாவின் அதிரடி பிரவேசத்துக்கு முன்னால், நாமெல்லாம் காணாமல் போய் விடுவோமோ என்று கதிகலங்கிப்போய் நிற்கிறார்களாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget