இது மிகவும் பிரபலமான ஒரு புரோகிராம். சில விநாடிகளில், ஹார்ட் டிஸ்க்கில் எந்த ட்ரைவில், எந்த போல்டரில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனக் காட்டும். பார் கிராபிக்ஸ் மூலம் ட்ரைவ்கள் எடுத்துள்ள இடம் காட்டப்படும். போல்டரில் கிளிக் செய்தால், அதே போன்ற வரைபடம் மூலம் இடம் காட்டப்படும். இடம் மட்டுமின்றி, பைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வரைபடம் காட்டும் படி மாற்றி அமைக்கலாம்.
இந்த வரை படத்தின் குறியீடுகளுக்கான வண்ணத்தினையும் மாற்றி அமைக்கலாம். இவற்றின் அடிப்படையில் எந்த போல்டரில் அல்லது ட்ரைவில் உள்ள பைல்களை நீக்குவது என்ற முடிவை எடுக்கலாம்.இதில் மூன்று விதமான புரோகிராம்கள் தரப்படுகின்றன. இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது ஒன்று. யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கில் பதிந்து இயக்க; இன்னொன்று வேறு வகை மெமரியில் வைத்து எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7 / 8
Size:3.19MB |