சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள படம் போடாபோடி. இப்படத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். கதைப்படி டான்சராக நடித்துள்ள அவர், அந்த கதாபாத்திரமாகவே மாறி அற்புதமாக நடித்துள்ளார். முதல் படம் என்கிற தடுமாற்றம் எந்த இடத்திலும் இல்லாமல் சீன் பை சீன் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிபபாக கிளாமர் காட்சிகளிலும் நிறையவே தாராளம் காட்டி நடித்திருக்கிறார்.
இதையடுத்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வரும் மதகஜராஜா படத்திலும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம். இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவியதையடுத்து, வரலட்சுமி பற்றிய டாக் அதிகரித்திருக்கிறது. முதலில் பெரிய நடிகரின் மகள் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தவர்கள் அவரது நடிப்பு பேசும்படியாக இருப்பதால் தங்கள் படங்களுக்கு வரலட்சியை புக் பண்ண தயாராகி வருகின்றனர். இதனால் கோடம்பாக்கத்தின் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கு வரலட்சுமியின் வரவு மனதளவில் ஷாக் கொடுத்திருக்கிறது.